Thinning Daily

Weight Loss Foods In Tamil

Weight Loss Foods in Tamil – Weight Loss Tips is a short and quick video on how to lose weight using certain foods. It elaborates on the Calorie burning foods that reduce weight by way of burning the extra weight. It also provides various weight loss tips in Tamil.

For More Subscribe
For Ayurveda Videos
For Tamil Recipes & Cooking
For Simple Healthy Recipes
For Home Remedies
For Diabetic Patients
For Natural Health in English Back 2 Nature

To Read this video article:

எடை குறைய
இதை சாப்பிடுங்க…
கண்ணில் கண்டதையெல்லாம் தின்று தேவையில்லாமல் உடல் எடையைத் தாறுமாறாக ஏற்றிவிட்டு, பின்னர் வருந்தி அவஸ்தைப்படுபவர்கள் ஏராளம்!
மேலும் அத்தகையவர்கள் அந்த எடையை எப்படி குறைக்கலாம் என்று கிடந்து அல்லாடுவார்கள்.
அதற்காக திடீரென்று உணவைக் குறைப்பார்கள். பட்டினி கூட இருப்பார்கள். வாக்கிங் போவார்கள்; ஜாக்கிங் செய்வார்கள்; காலையிலோ, மாலையிலோ ஓடவும் செய்வார்கள். ஆனால் எல்லாம் சில நாட்களுக்குத் தான்.
பிறகு, வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிவிடும்.
ஆனால் சில உணவுப் பொருட்களைக் கொண்டே நிறையக் கலோரிகளை எரித்து, நம் எடையை நன்றாகக் குறைக்க முடியும்.
அவை எடையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவுகின்றன.
இது போன்ற உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டாலே போதும். அதே நேரத்தில் உடற்பயிற்சியையும் தவறாமல் செய்ய வேண்டும்.
அத்தகைய உணவுகள் என்ன என்ன வென்று பார்ப்போமா?
திராட்சைப் பழங்கள் நம் உடலின் மெட்டபாலிசத்தைத் துரிதப்படுத்தி, ஏராளமான கலோரிகளைக் கரைக்க உதவுகின்றன. திராட்சை சாப்பிடுவதால் வயிறும் வேகமாக நிரம்பிவிடும்.
செலரி கீரையில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும் என்பதால் உணவைக் கட்டுப்படுத்த முடியும். செலரி கீரையை மற்ற உணவுகளோடு சேர்த்துச் சாப்பிடுவது நலம்.
பதப்படுத்தப்பட்ட தானியங்களை விட முழு தானியங்கள் நமக்கு மிகவும் நல்லது. இவற்றில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகள் அதிகம். ஆனால் கொழுப்பு குறைவு தான்! இவை மெதுவாகவே செரிக்கும் என்பதால், நமக்கு நீண்ட நேரத்திற்குப் பசி எடுக்காது.
இப்போதெல்லாம் நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்ட க்ரீன் டீ, எப்போதுமே நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதிலும் மெட்டபாலிசத்தைத் துரிதப்படுத்த, உடல் எடையைக் குறைக்க என்று இதன் நன்மைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒமேகா- 3 ஃபேட்டி ஆசிட் கொழுப்பைக் கட்டுப்படுத்தும் ஒரு அமிலம். மெட்டபாலிசத்தை நிலைப்படுத்துவதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டும் முக்கியப் பங்கு வகிக்கிறது. சால்மன், டுனா போன்ற மீன்களில் இந்த ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மிகுந்து உள்ளது.
காபியைப் பற்றி நமக்குச் சொல்லவே வேண்டாம். இது இதயத் துடிப்பைச் சீராக்குகிறது; இரத்தத்தில் அதிக பிராண வாயுவைக் கொண்டு சேர்க்கிறது; நிறையக் கலோரிகளையும் எரிக்கக் கூடியது.
வெண்ணெய் பழம் எனப்படும் அவகேடோ நம் உடலில் மெட்டபாலிசத்தைத் துரிதப்படுத்தி, நமக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் செல்களைக் காக்கிறது. மேலும், கொழுப்புச் சத்தைக் குறைக்கவும், காயங்களை ஆற்றவும், இதய நோய்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
கார வகை உணவுகளை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு உணவில் சேர்க்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு கலோரிகளை எரிக்கலாம்.
சியா விதைகளைத் தண்ணீரில் ஊற வைத்தால், கால் மணி நேரத்திலேயே அவை நன்றாக உப்பிக் கொண்டு வரும். பச்சடி, தயிர் அல்லது ஓட்மீலில் கலந்து சியா விதைகளை சாப்பிடலாம். கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும். இவை, கொழுப்பைக் குறைக்க வல்லவை.
கலோரியை எரிப்பதில் இந்த பிரேசில் நட்ஸ்களுக்கு அதிகப் பங்கு உள்ளது. மெட்டபாலிசத்தைத் துரிதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இவை நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. அதிலும் ஏலக்காய் மற்றும் வென்னிலா எசன்ஸ் கலந்து பிரேசில் நட்ஸ் பால் குடிக்கலாம். இல்லாவிட்டால், பப்பாளி, மாம்பழம் ஆகியவற்றுடன் பிரேசில் நட்ஸ்களை சேர்த்து சாப்பிடலாம்.

-~-~~-~~~-~~-~-
Please watch: “வாழை மரத்தின் பயன்கள் – Banana Tree Medicinal Uses”

-~-~~-~~~-~~-~-

Our sponsor:

Click Here to go directly to the video for Women

Please visit our sponsor:

Be sure to check back Soon. New videos added daily. Get the best tips, tricks and techniques for losing weight.

Find some that work for you, and feel great.

Related posts: